உதவி மையம்
இலாபமெடுத்தல் (Take Profit) & ஸ்டாப் லாஸ் ஆர்டர்கள் என்றால் என்ன?
1. இலாபமெடுத்தல் (Take Profit) ஆர்டர்: முதலீட்டாளர்கள் இலாப வாய்ப்பைக் கைப்பற்ற இந்த ஆர்டர் வகை உதவுகிறது. முதலீட்டாலர் இலாபமெடுப்பு ஆர்டரை முன்னரே அமைத்தபின், சந்தைவிலை முதலீட்டாளர் அமைத்த விலையை அடைந்தால் (trigger price) இலாபமெடுப்பு ஆர்டர் சந்தை ஆர்டராக மாறி அந்த நேரத்தில் நிறைவேற்றக்கூடிய சிறந்த சந்தை விலைக்கு நிறைவேற்றப்படும்;
2. ஸ்டாப் லாஸ் ஆர்டர்: இந்த ஆர்டர் வகை முதலீட்டாளர்கள் தங்கள் இழப்புகளைக் குறைக்க உதவுகிறது. முதலீட்டாளர் ஒரு ஸ்டாப் லாஸ் ஆர்டரை முன்னரே அமைத்தபின், சந்தைவிலை முதலீட்டாளர் ஏற்கெனவே அமைத்த விலையை எட்டினால், ஸ்டாப் லாஸ் ஆர்டர் சந்தை ஆர்டராக மாறி அந்த நேரத்தில் கடைசியாக உள்ள சந்தை விலைக்கு நிறைவேற்றப்படும்.
அனைத்து ஆர்டர்களும் (இலாபமெடுப்பு, ஸ்டாப் லாஸ் போன்றவை உட்பட) சந்தைச் சூழ்நிலையில் காணப்படும் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து பாதிக்கப்படுமென்பதையும் முன் தீர்மானிக்கப்பட்ட விலையில் நிறைவேற்றப்பட முடியாமல் போகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இந்தச் சூழலில் ஆர்டரானது சந்தையில் உள்ள அடுத்த சிறந்த விலைக்கு நிறைவேற்றப்படும். அத்துடன் முதலீட்டாளர்கள் முன்பே அமைக்கப்பட்ட பல்வேறு ஆர்டர்களையும் ஆர்டர் நிறைவேற்றப்படும் முன், சந்தை நேரத்தின்போது அவை ஆர்டரை முன்னமைத்தல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் திருத்தவோ அல்லது இரத்து செய்யவோ முடியும்.
இன்னும் உதவி தேவையா? எங்களுடன் அரட்டையடிக்கவும்
வாடிக்கையாளர் சேவைக் குழு 11 மொழிகளில் தொழில்முறை ஆதரவை வழங்குகிறது, தடையற்ற தகவல்தொடர்பு மற்றும் உங்கள் பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் மற்றும் திறமையான தீர்வுகள்.
7×24 H